மாபெரும் மக்கள் பங்கேற்புடன் பிரமாண்டமாக நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம்!

 

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தை மருதானை சந்தியில் பிரமாண்டமாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின பேரணியை சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்கு முன்னர் ஆலோசிக்கப்பட்ட போதிலும், மருதானை மண்சந்தி டவர் ஹால் தியேட்டருக்கு அருகில்  கூட்டத்தை நடத்துவது பொருத்தமானது என கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் அமைப்பாளர்கள் தலா அறுபது பேருடன் பங்கேற்க வேண்டும் என பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியானது மாபெரும் மக்கள் கூட்டத்தின் பங்கேற்புடன் மே தினத்தை நடத்தவுள்ளதாக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply