கடலில் மூழ்கிப் பாடசாலை மாணவி பரிதாபச் சாவு!

 

அம்பாந்தோட்டைக் கடலில் மூழ்கி பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சுசந்திகா என்ற 18 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.

உறவினர்களுடன் அம்பாந்தோட்டைக்குச் சுற்றுலா சென்ற மேற்படி மாணவி, கடலில் குளித்தபோதே நீரில் மூழ்கிச் சாவடைந்துள்ளார்.

அவரின் சடலம் அங்கு நின்றவர்களால் உடனே மீட்கப்பட்டது.

பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சடலம், அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply