மக்கள் மனதை வென்ற ஒரே தலைவர் ரணிலே! – அவர்தான் அடுத்த ஜனாதிபதி! அமைச்சர் மனுஷ உறுதி

இலங்கையில் தற்போது இருக்கும் மூத்த அரசியல் தலைவர்களில் சகல இன மக்களினதும் மனதை வென்ற ஒரே தலைவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளங்குகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் காலம் நெருங்கும் வேளையில் சிலர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றார்கள். அவர்கள் என்ன நோக்கத்துக்காக அப்படிச் சொல்கின்றார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றிநடை போடும். எமது கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாகவும் வருவார்.

ரணில் விக்கிரமசிங்க கட்சி சார்பு வேட்பாளர் இல்லாமல் பொது வேட்பாளராகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் சந்தர்ப்பம் உண்டு.

அவர் எந்த வழியில் போட்டியிட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கே பெருமை. எமது கட்சிக்கு நாள்தோறும் மக்களின் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான மூவின மக்களின் ஆதரவும் பெருகி வருகின்றது.” – என்றார்.

Leave a Reply