அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும்…! கனடாவில் அனுர வலியுறுத்து…!

நாட்டு மக்களிடையே இனவாதம் இல்லை  என்பதுடன் அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும் எனவும்  என  தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கினார்.
கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார, பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார்.
அந்தவகையில், நேற்று முன்தினம்(23) இடம்பெற்ற சந்திப்பில்  கலந்து  கொண்ட ஒருவரால்,  நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் பிரச்சினையிற்கு என்ன தீர்வு வழங்குவீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அனுர இதனை தெரிவித்தார்.
உண்மையில் நம் நாட்டில் சிங்கள தமிழ் மக்கள் இடையில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.
என்னுடைய ஊரில் தபால்காரர் தமிழ், வைத்தியர் தமிழ்,  நாங்கள் அனைவருடனும் ஒன்றாகவே இருந்தோம்.
ஆனால், அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தில் தன் இனத்தை முன் கொண்டு வர அரசியலில் பல சூழ்ச்சி செய்து நாட்டை மக்களை பிரித்தனர்.
அன்று பிரச்சனை ஏற்படும் போது தீர்த்து வைப்பது பிக்கு, அதேபோல ஒரு முஸ்லிம் இனத்தவர் என்றால் குரானின் அடிப்படையில் நடைபெறுகிறது.
ஆனால் அரசாங்கத்தில் அவ்வாறு அல்ல. சிறு வயதில் கற்ற கல்வி மாற்றி இன வேறுபாட்டை உருவாக்கி பிரிவை ஏற்படுத்தினார்கள். உண்மையில் பொதுவாக மக்களிடையே இனவாதம் இல்லை. அரசியலில் உள்ள இனவாதத்தை உடைக்க வேண்டும் எனவும் அனுர பதிலளித்தார்.

Leave a Reply