வதிவிட வீசா காலத்தை மீறி தங்கியிருக்கும் இலங்கையர்கள் – குவைத் அரசு எடுத்த அதிரடித் தீர்மானம்..!

குவைத்தில் வதிவிட வீசா காலத்தை மீறி நாட்டில் தங்கியிருந்து பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க குவைத் அமைச்சர் எமிர் ஷேக் மெஷல் அல் அஹமட் அல் ஜாபர் தீர்மானித்துள்ளார்.

குவைத் எமிர் ஷேக் மெஷால் அல்-அஹமட் அல்-ஜாபர் மற்றும் குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலசுப்ரமணியம் அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அபராதம் அல்லது சட்டத் தடைகள் எதுவும் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்த பொதுமன்னிப்பு காலம் கடந்த 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

தற்போது குவைத்தில் வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 19,620 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 5,000 இலங்கையர்கள் தற்போது இலங்கைக்கு திரும்புவதற்காக தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்தார்

எவ்வாறாயினும் இந்த பொதுமன்னிப்புக் காலத்திற்கு அப்பால் அவர்கள் இலங்கைக்கு வந்தால், கைது செய்யப்பட்டு, கைரேகை பதிவு செய்யப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply