இப்தார் நிகழ்வில் காசா மக்களுக்கு உதவித்தொகையை கையளித்த கல்முனை கல்வி வலயம் !

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது.

வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்தார் நிகழ்வின் போதே இந்த உதவித் தொகை கையளிக்கப்பட்டது.

இதன்போது, வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் முதற்கட்ட காசோலையினை வழங்கி வைத்தார்.

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய, கணக்காளரின் நெறிப்படுத்தலில், வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதி பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தி இத்தொகையானது திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இப்தார் நிகழ்வில் அரச நிறுவனங்களின் பிரதானிகள், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகள், வலயக் கல்வி பணிமனை கணக்காளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply