தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி…!

தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது.

தேசிய குறைந்தபட்ச சம்பள சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில்,  தேசிய குறைந்தபட்ச வேதனம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபா வரை 5,000 ரூபாவால் அதிகரிப்பதற்கும் மற்றும் குறைந்தபட்ச தேசிய நாளாந்த வேதனம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபா வரை 200 ரூபாவால் அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் 2016 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *