பாணந்துறையில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – இருவர் உயிரிழப்பு..!

  

களுத்துறை – பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பாணந்துறை மற்றும் பின்வத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு மோட்டார் சைக்கிள் வாத்துவாவில் இருந்து பின்வத்த பிரிவென வீதியில் திரும்ப முற்பட்ட போது மற்றைய மோட்டார் சைக்கிள் பாணந்துறையில் இருந்து வந்து நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Leave a Reply