யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் சென்ற இருவருக்கு ஏற்பட்ட கதி…!

யாழ் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலைக்குள் வாகனமொன்றில் அத்துமீறி நுழைந்து, இருவர் இரும்பு திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். 

அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள், திருடப்பட்ட இரும்புக் கம்பிகளுடனும் திருட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்துடனும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Leave a Reply