பசிலின் உயர் பதவி நாமலுக்கு…! மகிந்த வீட்டில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க,  நாமலுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply