
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.