திடீர் வாந்தி…! தம்பதியினர் பரிதாப மரணம்…! அகலவத்தையில் சோகம்…!

திடீரென வாந்தி ஏற்பட்டு சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர் .

அகலவத்தை – வந்துரப பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவரான கணவர் , வாந்தி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்று வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகவும்,  அதன்பின்னர், உயிரிழந்தவரது மனைவி களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply