குறையாத பொருட்களின் விலை; இலங்கையில் தனிநபர் மாதாந்த செலவில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மாற்றம்!

 

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைவடைந்த போதிலும், பொருட்களின் விலை குறிப்பிடத்தக்களவு குறைவடையவில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சியாமலி கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ தரவுகளுக்கமைய, 

நாட்டின் தனிநபர் செலவீனம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனிநபர் செலவீனம் 16,524 ரூபாவாக பதிவாகியிருந்தது.

எனினும், ஜனவரி மாதம் அந்த செலவீனம் 490 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சியாமலி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Leave a Reply