
வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இன்று மாலை மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.
முச்சக்கர வண்டி ஒன்றில் சிறுவர் பூங்காவிற்குள் நுழைந்த குறித்த குழுவினர் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இதனை அவதானித்த நபர் ஒருவர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரையும் தாக்கி காயப்படுத்தியதுடன், அவரது பெறுமதிக்க தொலைபேசியையும் உடைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்த போதும் நீண்ட நேரமாகியும் சம்பவ இடத்திற்கு சமூகமளிக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.