யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு…!

சர்வதேச சுழியக் கழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம், யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாண பொஸில் நிலையம், வடமாகாண சுற்றுலா சேவை அலுவலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் சந்திரன் கிருஷ்னேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி கலந்து கொண்டு தூய்மையாக்கும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

ஆரோக்கியமான யாழ் பவனியின் துவிச்சக்கர வண்டி பயணம் , யாழ் ஆரியகுளத்தில் இருந்து ஆரம்பமாகி வேம்படிச்சந்தி, வைத்தியசாலை வீதி, மகாத்மா காந்தி சுற்றுவட்ட வீதி, யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு வீதி, பண்ணை வீதி, ஊடாக பண்ணை சுற்று வட்ட வீதியூடாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *