
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குழந்தையின் பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் நேற்றையதினம் இரவு வவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் குறித்த குழந்தை மரணமடைந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் முரண்பட்டதுடன் வைத்தியசாலையின் கவனயீனத்தினாலேயே குழந்தை மரணமடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
தமது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினையும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தில் தவசிகுளம் பகுதியை சேர்ந்த டினோஜன் அக்சயன் என்ற 9 மாத குழந்தையே மரணமடைந்தது.
வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் கலந்துரையாடியதுடன் குறித்த குழைந்தையின் மரணம் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.