யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல்

அனைத்துலக சுழியக் கழிவு தினமான இன்று யாழ் நகரில் ‘யாழ் ஆரோக்கிய பவனி’ தூய்மையாக்கல் பணியும், விழிப்புணர்வு செயற்பாடும் இடம்பெற்றது.
இந்தியத் துணைத் தூதரகம், யாழ் மாநகரசபை, யாழ் பிரதேச செயலகம், தொல்லியல் திணைக்களம் மற்றும் யாழ் பொலிஸாரின் ஆகியோரின் பங்கேற்பில் சிகரம் நிறுவனத்தின் படலை வடமாகாண சுற்றுலா சேவைப் பிரிவினரின் ஒழுங்குபடுத்தலில்,
யாழ் மாநகர பகுதியில் தூய நகரை உருவாக்குவதை இலக்காகக் கொண்ட குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின்கீழ், யாழ் நகரின் பிரதான வீதிகள் சிலவற்றின் ஊடாகவும், யாழ்ப்பாணத்தின் சுற்றுலா ஈர்ப்பு வலயமாக காணப்படும் மணிக்கூட்டுக் கோபுரம் முதல் பண்ணை சுற்றுவட்டம் வரையிலான பகுதியிலும் தூய்மைக்கால் பணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ் ஆரியகுளம் சந்திப் பகுதியில் காலை 7 மணியளவில் ஆரம்பிக்கும் இந்தப் பணி, 3 வீதிகளூடாக யாழ் பண்ணைப் பகுதி வரையில் மேற்கொள்ளப்பட்டது.
பண்ணை நடைபாதை, யாழ் கோட்டை உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் பகுதிகளை நிரந்தரமாக தூய்மையாகப் பேணும் வழிவகைகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், இந்தியத் துணைத் தூதுவர், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,
யாழ் மாநகர ஆணையாளர், மாநகரசபையின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் மற்றும் யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply