ஜனாதிபதியே நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் : எஸ்.வியாழேந்திரன்

இந்த நாடு உள்ள நிலையில் இன்றைய ஜனாதிபதியே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதே சரியானது.முன்னர் இன்றைய ஜனாதிபதி தொடர்பில் விமர்சனங்களை செய்தாலும் இன்றைய காலத்தில் அவரின் செயற்பாடே சரியானது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் கூட்டுற கலையரங்கில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமாகிய நா.மதிவண்ணன் தலைமையில் இன்று (30) திகதி இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வீ.தங்கவேல், சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு பயிற்சி பிரிவு பொறுப்பாளர் க.வேல்வேந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதன்போது பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து பேரணி ஆரம்பமாக தேவநாயகம் மண்டபம் வரையில் வருகைதந்தது.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் நடனக் கலைஞர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுத் துறைக்கு பங்காற்றிய மகளிருக்கு இராஜாங்க அமைச்சரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், இதன் போது  கூட்டுறவு சங்கங்களினால் இராஜாங்க அமைச்சரிடம் சம்பள உயர்வு உள்ளிட்ட விடயங்கள் சிலவற்றைக் கோரி மகஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கட்டது.

 

Leave a Reply