ஈஸ்டர் தாக்குதலின் 5 ஆவது வருடம் – நாடு முழுவதிலும் அதிவிசேட பாதுகாப்பு..!

நாடளாவிய  ரீதியில் இன்று அதிவிசேடபாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்றுபிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply