
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு பகுதியில், 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சும் உபகரணங்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் தெல்லிப்பழை பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 40 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் ஒரு இலட்சம் மில்லிமீட்டர் கோடா என்பவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.