சில தொடருந்து சேவைகள் இன்றைய தினமும் இரத்து!

 

கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினமும் சில தொடருந்துகள் இரத்துச் செய்யப்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேலும் சில கரையோர தொடருந்து சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி தொடருந்து நிலையத்துக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணம் நேற்றைய தினம் கரையோர தொடருந்து மார்க்கத்தில் 25 தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply