ஒரே நாடு ஒரே சட்டம் என ஓங்கி ஒலித்த நாட்டில் இனத்துக்கொரு நீதியா? எம்.எம். மஹ்தி கேள்வி

ஒரே நாடு ஒரே சட்டம் என்று ஓங்கி ஒலித்த இந் நாட்டில் சிறுபான்மை பெரும்பான்மை சமூகங்களுக்கு என வெவ்வேறான நீதியா நிலைநாட்டப்படுகின்றன என கிண்ணியா நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நல்லாட்சி காலத்திலும் அதனை அண்மித்த காலங்களிலும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக பல்வேறு திட்டமிட்ட தாக்குதல்கள் மூலம் உயிர்கள் உடமைகள் என பல கோடிகள் வீணாக  அழிக்கப்பட்டன.

புத்தர் சிலைகளின் பாதுகாப்பு கண்ணாடிகள் சேதமாக்கப்பட்ட போது குற்றவாளியை  கைது செய்து சிறைகளில் அடைத்து தண்டனையை பெற்றுக்கொடுத்த அரசு, பட்டப் பகளில் பேரணியாக வந்து பள்ளிகளை உடைத்த குற்றவாளிகளை கைது செய்ய முயற்சிக்கவும் இல்லை. நட்ட ஈடுகள் வழங்கவுமில்லை.

முஸ்லீம்களின் உயிர்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் என அழிக்கப் பட்ட போதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பொறுப்பானவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

சிறுபான்மை முஸ்லீம் மக்களின் உயிர் உடமைகளின் அழிப்புகளுக்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் பாரபட்சமாக இருப்பதானது இந்நாட்டில் வெவ்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளனவா? என்ற கேள்விகளை எழுப்புகின்றன.

எனவே நாட்டின் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க மேற்குறித்த விடயங்களுக்கு இனிமேலாவது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டி உரிய இழப்பீடுகளையாவது வழங்க நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *