ஜனாதிபதி விசாரணைக்குழுவில் ஆஜராக மைத்திரிக்கு உத்தரவு..!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்குத் தெரியும் எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி விசாரணைக்குழுவில் முன்னிலையாகி உரிய ஆதாரங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை ஏப்ரல் 2ஆம் திகதி விசாரணைக் குழு முன் ஆஜராகி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் அளித்த வாக்குமூலம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறும் அந்த எழுத்துமூல அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023 செப்டம்பரில் ஒளிபரப்பப்பட்ட செனல் 4 திரைப்படத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி வெளிப்படுத்திய தகவல்களின் விசாரணை உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஐ.எம்.இமாம் தலைமையிலான விசாரணைக்குழுவே இந்த அழைப்பை விடுத்துள்ளது.

விசாரணைக் குழுவின் தலைமைச் செயலாளர் திருமதி எஸ். மனோகரன், இது தொடர்பான எழுத்துமூல அழைப்பை கடந்த வியாழக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *