காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்த மூதாட்டிக்கு அதிர்ச்சி – கருநாகம் தீண்டி உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் துயரம்

 

மட்டக்களப்பு, களுவன்கேணி பிரதேசத்தில் கருநாகப்பாம்பு தீண்டியதில் 76 வயதுடைய மூதாட்டியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் களுவன்கேணி கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தாயான சின்னத்தம்பி கற்பகம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி தனது வீட்டிற்கருகிலுள்ள காணியைத் துப்புரவு செய்துகொண்டிருந்தவேளை குப்பைக்குள் மறைந்திருந்த கருநாகப்பாம்பு தீண்டிவிட்டதாகத் தெரிவித்த நிலையில் மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவரை செங்கலடி வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றவேளை மூதாட்டி உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதிசெய்துள்ளனர்.

Leave a Reply