மசாஜ் நிலையங்களில் விசேட சோதனை – 16 பெண்கள் கைது..!

 

அநுராதபுரம் நகரில் உள்ள பல மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர்.

அநுராதபுரத்தில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பின்னர் சில மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட 4 பேரும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை பரிசோதிப்பதற்காக இன்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மாத்தறை நகருக்கு அருகிலுள்ள மசாஜ் மையங்களில் பணிபுரிந்த 12 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட 5 மசாஜ் மையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண்கள்; காலி, கேகாலை, கொழும்பு, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply