தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஸ்வேஷ்வர ராவ்
உன்னை நினைத்து, பிதாமகன் , ஈ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.
நடிகர் , இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் ஆளுமை கொண்டவர் தான் விஸ்வேஷ்வர ராவ். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
தனது 6 வயதில் இருந்தே நடிக்க தொடங்கிவிட்ட இவர் 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஸ்வேஷ்வர ராவ் சினிமா தவிர்த்து தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். விக்ரம் சூர்யா நடித்து பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் லைலாவுக்கு தந்தையாக நடித்திருந்தன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவரின் திடீர் இழப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
The post பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.