பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது! – மைத்திரி அதிரடி

 

தமக்கு பாதுகாப்பு தொடர்பில், எவ்வித பிரச்சினையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்போது போதியளவான பாதுகாப்பு தமக்கு கிடைக்கப்பெறுவதாகவும் அவர் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி,  உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அண்மையில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

எனினும், குறித்த வழக்கு தற்போது, நீதிமன்றில் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பில், தாம் எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply