திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (02) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஈச்சிலம்பற்று -இலங்கைத்துறை பகுதியைச் சேர்ந்த 35 வயமுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன் பகையினை தீர்ப்பதற்காக குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற சிலரே கூரிய ஆயுதங்களால் இத்தாக்குதலை மேற்கொண்டு , கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.
அதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.