தாக்குதலுக்கு சென்ற வன்முறைக் கும்பலை மடக்கிப் பிடித்த ஊர்காவற்துறை மக்கள்.!

இன்றைய தினம் ஊர்காவற்துறை – மெலிஞ்சிமுனை பகுதியில் தாக்குதல் ஒன்றினை நடாத்துவதற்கு சென்ற வன்முறைக் கும்பல் ஒன்றை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற 2012 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்கள் வாட்ஸப் சமூக ஊடகம் ஒன்றில் குழுவாக செயற்பட்டு வந்தனர். இந்நிலையில் அந்த குழுவில் இருந்த, இருவருக்கிடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் முரண்பாட்டில் ஈடுபட்ட ஒருவரை தாக்குவதற்காக இன்னொருவர் வெளியில் இருந்து வன்முறைக் கும்பல் ஒன்றினை வரவழைத்துள்ளார். 

அந்தவகையில் ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல் தாக்குதலை நடாத்த முயன்றவேளை ஊரில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குறித்த கும்பலை மடக்கிப் பிடித்து ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply