மேலும் 7 பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை வருகின்றது

ஒரு முறை பாவித்து நீக்கப்படும் 7 வகையான பிஸாட்டிக் மற்றும் உற்பத்திகளை தடை செய்வதுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரம் ஒன்று நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவற்றினுள், பிலாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பானம் உறிஞ்சான், முட்கரண்டி, குடிநீர் கோப்பை, கேக் வெட்டும் கத்தி, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனினால் தயாரிக்கப்பட்ட பூ மாலைகள் ஆகியன உள்ளடங்குகின்றன.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து ´செசே´ பெக்கெட்டுகள் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிலாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திப் பொருட்களை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல், ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து உக்காத லன்ச்சீ்டடை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் ஆண்டுதோறும் 2 பில்லியனுக்கும் அதிகமான பொலித்தீன் பைகள் கொட்டப்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

adstudio.cloud

https://s3.amazonaws.com/adzassets/DIALOG/Dialog%20Mobile%20Power%20Plan%20August/SIN/300×250%20SIN/index.html

adstudio.cloud

https://s3.amazonaws.com/adzassets/DIALOG/Dialog%20Mobile%20Power%20Plan%20August/SIN/300×250%20SIN/index.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *