நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பிரபல சிங்கள நடிகையான தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தென்கொரியாவிற்கான வீசா பெற்றுத் தருவதாகக் கூறி, 30 இலட்சம் ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.