கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றினால் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ, இணையத்தளத்திற்கு நேற்று சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, அமைச்சின் இணையத்தளத்தில் உள்ள தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார்.