வர்த்தகர்களின் அதீத இலாபம் தொடர்பில் பகிரங்கமாக வெளிப்படுத்தியமை தொடர்பில் ஐக்கியக் குடியரசு முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு தனது வணக்கத்தை செலுத்தவுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் வழிவகைகள் குழுவின் தலைவருடன் கலந்துரையாடியதன் பின்னரேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் ஏனைய உறுப்பினர்கள் பாராளுமன்றக் குழுவின் கீழ் வர்த்தகர்கள் முறையற்ற முறையில் பெறும் இலாபங்கள், முறைகள் மற்றும் வழிமுறைகளை வெளிப்படுத்த உழைத்தனர். அரசியல்வாதிகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை என திரு.அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார். பண்டிகைக் காலங்களில் நுகர்வோரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.
அதனை நிறைவேற்றுமாறு தேசிய நுகர்வோர் முன்னணி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளும் விலைவாசி விஷயத்தில் மௌனக் கொள்கையை கடைபிடிக்கின்றன. எனவே, எதிரணிக்கு மோசடி வியாபாரிகள் நிதியுதவி வழங்குகிறார்களா என்ற சிக்கல் எழுவதாக சம்பத் வலியுறுத்தியுள்ளார்.
இல்லை என்றால் சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மோசடி வர்த்தகர்களுக்கு எதிராக முன்வர வேண்டும் என அசேல சம்பத் சுட்டிக்காட்டினார்.