“சாந்தன் ஏன் சந்தனமானார்?” – யாழில் நினைவஞ்சலி

“சாந்தன் ஏன் சந்தனமானார்?” என்ற தொனிப்பொருளில், மறைந்த சாந்தனுக்கு, யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வினை யாழ். மாவட்ட போராளிகள் நலனுபுரிச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

சாந்தன் எழுதிய புத்தகங்கள் மற்றும் அவரது சிறை அனுபவங்களை நினைவுகூறும் வகையில் இந் நினைவஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, மறைந்த சாந்தனின் திருவுருவப்படத்திற்கு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்தூவி, மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் மற்றும் யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் பேராசிரியர் கணேசலிங்கம், தவத்திரு வேலன் சுவாமிகள், சொற்செற்செல்வர் ஆறுதிருமுருகன் உள்ளிட்ட மதத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது, சாந்தனின் தாயார் மற்றும் சகோதரர்களிடம், போராளிகள் நலன்புரிச்சங்கத்தினரால் சாந்தனின் திருவுருவப்படம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் புத்தகப் பைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, விடுதலைகியாகிய சாந்தன் இலங்கைக்கு வரவிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *