மஹிந்த தலைமையில் மீண்டும் கூடுகிறது பொதுஜன பெரமுன..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய கூட்டமொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் மஹிந்த ராபஜக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் ஸ்தாபகத் தலைவர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இந்தக் கூட்டம் வழமையாக கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காகவே ஆகும் என்றார்.

எனினும், கட்சியின் கடந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக கட்சியின் அங்கத்தவர்கள் கருத்து வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 

அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தொடர்ச்சியாக சில உறுப்பினர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன்,  கட்சியின் உறுப்பினர்கள் வேறு கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் தீர்மானங்கள் எடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *