ஹட்டன் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பிலாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
குறிப்பாக நகரைச் சுற்றிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் உக்கும் உக்கா பொருட்கள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன.
இதனால் அப்பகுதியில் செல்லும் வழிப்போக்கர் கள் மூக்கை மூடிக் கொண்டு செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
சில நேரங்களில் பொலித்தீன் பிலாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே தீ வைக்க படுவதையும் காண கூடியதாக உள்ளது.
அதேபோல் ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது கழிப்பறை பகுதியில் கழிப்பறைக்காக கட்டப் பட்ட குழியில் இருந்து கழிவு நீர் கசிந்து வழிந்து கொண்டு உள்ளது அதனால் அப் பகுதியில் துர் நாற்றம் வீசுவதை காண கூடியதாக உள்ளது.
இந்த இரு வேறு பிரச்சினை சம்பந்தமாக நகர சபை செயலாளர் திரு.பண்டாரவிடம் தொலைபேசி மூலம் வினவிய போது ஹட்டன் நகர சபைக்கு குப்பை கொட்ட முரையான இடம் அரசாங்கம் வழங்க வில்லை.
இந்த விடயம் தொடர்பாக பல முறை முன்பு இருந்த நகர சபை தலைவர்கள் முயற்சி செய்தும் பலனில்லை எனவும் இம் முறை நாம் முயன்று கொண்டே இருக்கிறோம் வெகு விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என அவர் கூறினார்.
எது எப்படியோ அன்றாடம் ஹட்டன் நகரில் பல ஆயிரக்கணக்கான மக்கள் நடமாட்டம் உள்ளது.
அத்துடன் நகரில் உள்ள குடிமக்கள் நலன் கருதி இன்றைய அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறந்தரமான தீர்வைக் எதிர் வரும் தேர்தலுக்கு முன்னர் பெற்று கொடுக்க வேண்டும் என நகரில் உள்ள வர்த்தகர்கள். கோரிக்கை விடுக்கின்றனர்.