அரிசியின் விலையை நூறு ரூபாய்க்கு கீழே குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினர் இன்று(09) காலை சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையம் முன்பாக இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள், “அரிசியின் விலையேற்றத்தால் பசியில் வாடுகிறோம், நிறுத்து நிறுத்து வளச் சுரண்டல்களை நிறுத்து, பொருளாதார சுமையைக் குறை, ஏழையின் வயிற்றில் அடிக்காதே, பட்டினிச் சாவு வேண்டாம், பிள்ளைகளை பசியால் வாட்டாதே ” உள்ளிட்ட சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.