திருமலையில் பாடசாலையொன்றில் தரம் 01 மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட திருக்கடலூர் நாமகள் பாடசாலையின் தரம் 1க்கான மாணவர்களின் வருகையில் பல வருடங்களாக வீழ்ச்சி கண்டுள்ளமையால் சமூக ஆர்வலர் இராஜகோன் பிரதீபனால் குறித்த பாடசாலைக்கு ஒவ்வொரு வருடமும் கற்றல் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
அத்துடன் 2023ம் ஆண்டில் இருந்து கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையாக ரூபா 100000.00 வழங்கப்பட்டு வருவதுடன் இவ் ஆண்டில் (2024) 07 மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் மொத்தமாக ஏழு இலட்சம் வங்கி கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படுவதுடன், வீ. செல்வராசாவை கௌரவிக்கும் நிகழ்வும் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் இன்று (10) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.