மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தனது வீட்டுக்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்,
மக்கள் பிரதிநிதிகள் இன்றி அதிகார வர்க்க ஆட்சியின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.
உள்ளூராட்சி மன்றங்களை அதிகாரிகளின் கீழ் வைத்திருப்பது அடிப்படை உரிமை மீறல் என்று நீதிமன்றம் கூறியது.
அவர்கள் இல்லாமல் இயங்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
அப்படியானால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை.
ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதம நீதியரசர், பாதுகாப்புப் படைத் தலைவர் ஆகியோர் மக்கள் பிரதிநிதிகள் இன்றி ஆட்சியமைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.