நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா நேற்றைய தினம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று விநாயகப் பெருமான் உள்வீதி எழுந்தருளினார்.

அதனை தொடர்ந்து வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில்  விநாயகப் பெருமான்  வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

திருமஞ்ச உற்சவத்தில் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர,தவில் கலைஞர்களின் விசேட தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *