திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபா செலவில் 3கிலோ மீற்றர் தூரம் கொண்ட ஹாப்பெட் இடும் பணி இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கண்காணிப்பின் கீழ் இப் பாதை அபிவிருத்தி பணி இடம்பெற்றது.
திருகோணமலையில் இயங்கிவரும் பிரகாஷ் construction இதனை அமுல்படுத்தி வருகிறது இதில் மூர் வீதி, வித்தியாலயம் வீதி வித்தியாலயம் ஒழுங்கை ஔ கல்லூரி வீதி சாரதா வீதி, ஔவையார் வீதி உட்பட ஒவ்வொரு வீதியும் தலா ஒரு கிலோ மீற்றர் வரை மொத்தமாக 3 கிலோ மீற்றர் தூரம் வரை காபட் இடும் பணியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான வீதி அபிவிருத்தி வீடுகள் கொரியா, சீனா போன்ற நாடுகளின் கம்பெனிகளாலே இலங்கையில் மேற்கோள் கொள்ளப்பட்டது. நேற்று முதல் தடவையாக திருகோணமலையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினால் இந்த பாதையிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் குழுவின் கண்காணிப்பின் கீழ் திறம்பட செயற்படுத்தப்பட்டு வருகின்றனர்.