ஹட்டனில் பண பரிமாற்ற அட்டையை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹட்டன் குற்றவியல் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் நேற்று(10) மாலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் ஹட்டன் நகரில் உள்ள பணப்பரிமாற்ற இயந்திரத்தின்(ATM) அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 3 பணப் பரிமாற்ற அட்டைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யபட்டவர் டிக்கோயா என்போல்ட் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.