மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய அசுர வேகத்தில் வந்த டிப்பர் – அரச அதிகாரி பரிதாப மரணம்..! யாழில் துயரம்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் அரச அதிகாரி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

மட்டுவில் வடக்கை பிறப்பிடமாகவும், கோண்டாவிலை  வசிப்பிடமாகவும் கொண்ட, தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரியான, 56 வயதுடைய கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்  என்பவரே  இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

பாடசாலை ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் வியாழக்கிழமை, கோப்பாய் – கைதடி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று  அதிகாலை உயிரிழந்துள்ளார்.

இவர் இந்து நாகரிகம் மற்றும் தமிழ் பாடங்களை உயர்தர மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறந்தவராக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *