தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இன்று காலை முதல் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் ஆசியுடன் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இன்றைய தினம் பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து மருத்துநீர் பெற்றுச்செல்வதை காணமுடிந்தது.
இன்று மாலை 4.30மணி தொடக்கம் மருத்துநீர் வைத்து நீராடி புத்தாடை அணிந்து, ஆலயத்தில் இரவு 8.15மணியளவில் நடைபெறும் வழிபாடுகளில் கலந்துகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.