தலவாக்கலை இலங்கை வங்கி கிளையின் பணப்பரிமாற்றல் செயற்பாட்டின்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை இலங்கை வங்கி கிளையில் பணத்தை பெறுவதற்கும், வைப்பில் இடுவதற்குமாக மூன்று தன்னியக்க பொறி இயந்திரங்கள் (ATM – CDM) பொருத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைவதன் காரணமாக கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
குறிப்பாக பண்டிகை காலங்களில், அதே போல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்ற நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் வங்கி முகாமைத்துவமும் கண்டு கொள்வதில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
நேற்றும், இன்றும் இந்த வங்கிக் கிளையில் பொருத்தப்பட்டுள்ள பண பரிமாற்ற இயந்திரங்களில் இரண்டு மாத்திரமே இயங்குகின்றன .
இதனால் பண கொடுக்கல் வாங்கல்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த வங்கி கிளைக்கு புதிய தன்னியக்க இயந்திரங்களை பொருத்துவதற்காண நடவடிக்கைகளையும் , மேலும் இரண்டு தன்னியக்க இயந்திரங்கள் பொறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும், தற்போது இயங்காமல் உள்ள தன்னியக்க பண பரிமாற்ற இயந்திரங்களை உடன் இவற்றை சரி செய்ய வேண்டும் என பாவனையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.