வடக்கு கடற்பரப்பில் நாரா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இதுவரை வெளிவராதது ஏன்? -அன்னராசா கேள்வி..!!

நாரா நிறுவனம் வடக்கு கடல்தொழிலாளர்களையும் வடக்கு கடல்தொழில் சமூகத்தினையும் நாரா நிறுவனம் அளித்து வரும் செயல்பாட்டினை செய்து வருவதாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

இன்று யாழில்  இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றின்போதே குறித்த விடயம் தொடர்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாரா நிறுவனத்தின் அலுவலகம் கடந்த வாரம் கடந்த வாரம் கிளிநொச்சி மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வடக்கு கடல் தொழில் சமூகம் இந்த நாரா நிறுவனத்தின் மீது பல குற்றச்சாட்டுக்களை நாங்கள்  தெரிவித்து வருகின்றோம். 

அதற்கு பொறுப்பானவர்களும் அந்த திணைக்களங்களும் அதற்கு பதில் கூறியதாக இல்லை. எங்களினுடைய வரிப்பணத்தில் சம்பளத்தை பெற்றுக்கொண்டு செய்யப்படுகின்ற ஆய்வுகள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. 

அந்த ஆய்வுகளை ஏன் இந்த திணைக்களங்கள் மேற்கொள்ளுகிறது. நீங்கள் அலுவலகம் திறந்தும் வடக்கு கடல்தொழிலாளர் களையும் வடக்கு கடல்தொழில் சமூகத்தையும் அந்நியப்படுதும் செயல்பாட்டை இலங்கையின் நாரா நிறுவனம் கனக்கச்சிதமாக செயல்படுத்தி வருகிறது. 

உங்களினை சந்திப்பது எமக்கு முக்கியம் இல்லை. குறிப்பாக ஊர்காவல்துறை பிரதேச செயலகத்தில் பருத்தித்தீவு தொடங்கி குடாக்கடல் வரைக்கும் ஆய்வு அறிக்கைகளை ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் நீங்கள் வழங்குங்கள். அந்த ஆய்வுகளை எங்களுக்கு வெளிப்படுத்துங்கள். என தெரிவித்துள்ளார் 

தொடர்ந்து  அவர் கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பிலும்  இதன் போது அவர் தெரிவித்திருந்தார்.

அமைச்சரை  பற்றி அவர் குறிப்பிடுகையில், நீங்கள் பொன்னாவெளியிலே ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் தான் என்று கூறுகிறீர்கள். வடக்கில் இருக்கின்ற கடலிலே, அதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலே நாரா நிறுவனத்தின் ஆய்வுகளின்றி  சட்ட விரோத கடலட்டை பண்ணை செய்கிறீர்கள்.  நாங்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. 

அபிவிருத்தியை வரவேற்கின்றோம். இந்த ஆய்வுகளும் சரி, மீனவர்களினுடைய ஆய்வுகளும் சரி செய்கின்ற அபிவிருத்தி மக்களுக்கு உகந்ததல்ல. தயவு செய்து உங்களுக்கு கீழ் நீங்கள் அமைச்சராக இருக்கின்ற திணைக்களங்களே  இப்படி இந்த ஆய்வுகளே வடக்கு கடல்தொழிலில் மேற்கொள்ளவில்லை. பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவிலே வட கிழக்கு கடல்கள்  நீண்டகாலமாக ஆய்வு செய்யப்படவில்லை என்ற கருத்தை நாரா நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி அந்த மேற்பார்வை குழுவிலே 3 ஆம் மாதம் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்பார்வைக்குழுவிலே தெரிவித்திருந்தார். 

நீங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறுகிறீர்கள். ஆனால் அவர் வடக்கு கடல் ஆய்வு செய்யப்படவில்லை என்றால் மக்கள் நாங்கள் எதை சொல்வது. பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவிலே சொல்வது உண்மையா? அல்லது கடல் தொழில் அமைச்சர் சொல்வது உண்மையா? மீனவர்கள் நாங்களும் சொல்கின்றோம் எந்த ஒரு ஆய்வுகளும் இன்று வரைக்கும் வெளிப்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு அந்தந்த பிரதேசங்கள் மேற்கொள்ளுகின்ற திட்டங்களுக்கு  சூழல் சார்ந்த அறிக்கைகளும் மக்கள் பாவனைக்கு வைக்கப்பட வேண்டும். 

இன்று வரைக்கும் அது எங்கே வைக்கப்பட்டுள்ளது. வெறுமனே கூட்டங்களை கூட்டி திசை திருப்பி சட்டத்துக்கு புறம்பான செயல்பாடுகளை செய்யாக்காதீர்கள் நாங்கள் கடலோடு கரையோடு மீன்பிடியோடு வாழ நினைக்கின்றோம். எங்களினுடைய சந்ததியும் வாழ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *