வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் இன்று பிற்பகல் புது வருடம் பிறக்கும் நேரமான 8:15 மணியளவில் விசேட பூசைகள் இடம் பெற்றன.
ஆலய பிரதம குரு கணபதீஸ் வரக்குருக்கள் தலமையில் இடம் பெற்றது.
இதே வேளை ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் குரோதி வருஷ வழிபாடுகள் நாளை ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4:30 மணிக்கு சுப்ரபாதமும், 5:00 மணிக்கு உசற்கால பூசையும், 05.15 மணிக்கு அபிஷேகமும் ஆரம்பமாகவுள்ளதுடன் முதலாம் கால பூஜை 06.00 மணிக்கும், வசந்தமண்டப் பூஜை 06.15 மணிக்கும் மேஷசங்கிராந்தி தீர்த்தம் 07.00 மணிக்கும் கை விசேஷம் 07.30 மணிக்கும், இடம் பெறவுள்ளதுடன் பொங்கல் 08.00 மணிக்கும் இடம் பெறவுள்ளது.