யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார்.
புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகரின் தூய்மை பராமரிப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாடுக்களும் விமர்சனங்கள பலதரப்பட்டவர்களிடமிருந்து முன்வைக்கப்படு வரும் நிலையில் அது தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்த கள விஜயம் அமைத்துள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண நகரின் மையப்பகுதி மற்றும் புதிய மாநகரசபை கட்டட வளாகம் அதனை அண்டிய சுற்றுவட்டத்தின் நீர் வடிந்தோடும் வடிகால்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட அமைச்சர் அவற்றை தூய்மையாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.