பண்டிகைக் காலத்தில் பட்டாசு வெடிப்பதால் செல்லப்பிராணிகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்லவின் கருத்துப்படி,
பட்டாசுகள் மனிதர்களின் அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், வனவிலங்குகள், குறிப்பாக நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட பறவைகள் மற்றும் சிறிய பாலூட்டிகளின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
உரத்த வெடிப்புகளின் பொருட்டு பறவைகள் பயத்தில் கூடுகளை விட்டு வெளியேறி, அவற்றின் வாழ்விடங்களை சீர்குலைக்கும் நிலை ஏற்படும்.
விலங்குகள் மனிதர்களை விட மிகவும் அதிக செவித்திறன் கொண்டவை, அவை குறிப்பாக பட்டாசு வெடிப்புகளுக்கு அதி உணர்திறன் கொண்டவை.
மேலும், 50 சதவீத நாய்கள் பட்டாசு வெடிக்கும் போது பயம் அல்லது பதட்டத்தை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.