மித்தெனிய – உலஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடு ‘பம்பர’ என அழைக்கப்படும் உள்ளூர் கஞ்சா வியாபாரிக்கு சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.
12ஆம் இலக்க தோட்டாக்களும், இரண்டு பிளின்ட்லாக் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்
வீட்டின் தூண் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது குண்டுகள் வீசப்பட்டுள்ளன
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.